உலகை உறைய வைத்த பிரிட்டனின் `ரத்த ஊழல்’ - 3 ஆயிரம் பேர் பலி.. நாட்களை எண்ணும் 30 ஆயிரம் பேர்

x

பிரிட்டன் தேசிய சுகாதார சேவை வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாகக் கருதப்படும் "ரத்த ஊழலால்" ஆயிரக்கணக்கானோர் எய்ட்ஸ் மற்றும் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது...

1970கள் மற்றும் 1980களில் பிரிட்டனில் ரத்தம் ஏற்றப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் எச் ஐ வி மற்றும் ஹெபடைடிஸ் சி வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது... 1970 களின் முற்பகுதியில் ஹீமோபிலியா எனப்படும் ரத்தப் போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த பிளாஸ்மாவிலிருந்து பெறப்பட்ட

ஆன்டிஹெமோபிலிக் காரணி மூலம் புதிய சிகிச்சையளிக்கும் முறையை பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அறிமுகப்படுத்தியது... அதிக தேவை காரணமாக, ஆன்டிஹெமோபிலிக் காரணி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.. அங்கு பிளாஸ்மா நன்கொடைகள் பெரும்பாலும் கைதிகள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடம் இருந்து பெறப்பட்டிருந்தன... இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்ட 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எய்ட்ஸ், கல்லீரல் அழற்சி மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்... அவர்களில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்து விட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 90 நாள்களுக்குள் 2 கோடி ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்