வயலுக்கு நடுவே பிரமாண்ட மிக்கி மவுஸ்...
பொதுவா நம்ம ஒரு கார்ட்டூனுக்கு தீவிரமான ரசிகரா இருந்தோம்னா... அந்த கார்ட்டூன் பிரின்ட் பண்ண டீ சர்ட், பேக், வாட்டர் பாட்டில், ஸ்டிக்கர்னு எல்லாத்தையும் வாங்கி அலப்பறை குடுப்போம்... அதிகப்பட்சமா நம்மளோட ஃபேவரைட் கார்ட்டூன இப்டி தான் கொண்டாடி தீர்ப்போம்... ஆனா இங்க ஒருத்தர்... தன்னோட ஃபேவரைட் கார்ட்டூனுக்காக வேறலெவல்ல ஒரு வேலைய பாத்து வச்சுருக்காரு...
ஜெர்மன் நாட்டை சேந்த இவர் எர்ன்ஸ்ட்... தன்னோட சின்ன வயசுலே இருந்தே வெறித்தனமான மிக்கி மவுஸ் ரசிகரா வலம் வர இவரு... மிக்கி மவுஸ்க்காக எதாச்சும் பண்ணனும்னு நெனச்சுருக்காரு...
1923 ல ஆரம்பிச்ச வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்த வருசம் 100 இயர் செலப்ரேட் பண்ண போறதுனால... அதை கொண்டாடும் விதமா... 3 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தண்ணோட சூரிய காந்தி தோட்டத்த... மிக்கி, மினி ஷேப்ல டிசைன் பண்ணி... அதை டூரிஸ்ட் பிளேஸ்ஸாவே மாத்திட்டாரு.... இந்த தோட்டத்தை டாப் வீவ்ல இருந்து பாக்கும் போது பிரம்மாண்ட பச்சை தோட்டத்துக்கு நடுவுல ட்ராவ்யிங் பண்ண மாதிரியே இருக்கும்...