"நாங்கள் தான் காரணம்.." ஜின்பிங்கிடம் ஓபனாக சொன்ன பைடன் | Biden

x

அமெரிக்கா ஒரு பசிபிக் நாடு என்று சீன அதிபர் ஜின்பிங்கிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்...

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது... இதில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், அங்கு அமெரிக்க அதிபர் பைடனுடன் இருநாட்டு உறவு குறித்து கலந்தாலோசித்தார்... சந்திப்பின் போது, அமெரிக்கா ஒரு பசிபிக் நாடு என்பதால், பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்... தாங்கள் இருப்பதால் தான் பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும் பாதுகாப்பும் உள்ளதாகவும், வளர்ச்சி இருப்பதாகவும் பைடன் குறிப்பிட்டார்...

உலகின் 2 பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே நிலையான உறவு இருப்பது உலகிற்கு நல்லது என்றும் பைடன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்