பைடன் விலகினாலும்.. கமலாவுக்கு மெகா செக் வைத்த `1976'`-கட்டுக்கடங்கா உற்சாகத்தில் ட்ரம்ப்

x

பைடன் ஆதரவு அளிப்பதால் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக முடியுமா..? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு..

பைடன் விலகினார்.. என்பதே உலக செய்தி நிறுவனங்களில் தலைப்புச் செய்தி..

ஆம்... வல்லரசு நாடான அமெரிக்காவில் ஒவ்வொரு நகர்வையும் உலக நாடுகள் உற்று நோக்கும்.. அப்படி நவம்பர் அதிபர் தேர்தலில் வெல்லப்போது யார்...? என்ற எதிர்பார்ப்பில் இருந்த போது.. சிட்டிங் அதிபர் பைடன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் உடனான விவாதத்தில் சொதப்பியதில் இருந்து பைடன் போட்டியிலிருந்து பின்வாங்க வேண்டும் என்ற சொந்த கட்சியினர் அழுத்தத்திற்கு அடிபணிந்த பைடன் விலகுவதாக அறிவித்துவிட்டார். அப்படி தனது துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக ஆதரவையும் பைடன் தெரிவித்ததும் அமெரிக்காவில் ஹாட் டாப்பிக்காகவே இருக்கிறது.

ஜனநாயக கட்சியினரை ஒன்று திரட்டி.. டிரம்பை தோற்கடிப்பேன் என சூளுரைத்திருக்கிறார் கமலா ஹாரிஸ்..

அமெரிக்க அதிபர் வேட்பாளராக பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார் கமலா ஹாரிஸ்... பைடனின் பிரச்சார செயலகம்... கமலா பிரச்சார செயலகம் என பெயர் மாற்றமும் செய்யப்பட்டுவிட்டது. முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் என பல ஜனநாயக கட்சியினரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளர் என்ற பேச்சு எழவுமே கட்சிக்கான தேர்தல் நிதி குவிய தொடங்கிவிட்டது. கமலா ஹாரிஸ் அறிவிப்பை மக்களும் பலர் வரவேற்று வருகிறார்கள்..

ஆனால் பைடன் அறிவித்ததால் ஜனநாயக கட்சியில் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளர் ஆக முடியுமா? என்றால் இல்லை.. ஆம்... அதிபராக இருக்கும் பைடன் அதிபர் பொறுப்பிலிருந்து விலகவில்லை. அப்படி விலகினால்.. அப்பொறுப்பு துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிசுக்கு வரும்.. அவரும் அப்படியே அதிபர் வேட்பாளராகிவிடலாம். ஆனால் அப்படியில்லாத சூழலில்.. ஜனநாயக கட்சியில் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஓட்டுக்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமலா ஹாரிஸ்.. அதிபர் வேட்பாளர் தேர்வுக்கு ஜனநாயக கட்சியின் விசுவாசிகள் உட்பட 3900 பிரதிநிதிகள் முதல் சுற்றில் வாக்களிப்பார்கள். அதிபர் வேட்பாளராக ஒருவர் 1976 பிரதிநிதிகளின் ஆதரவை பெற வேண்டும்.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியில் கலிஃபோர்னியாவின் ஆளுநர் காவின் நியூசம்... போக்குவரத்து துறை செயலாளர் புட்டிகீக்... பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ போன்றோர் பெயரும் அடிபட, அவர்கள் துணை அதிபராகலாம் என்ற பேச்சும் உலாவுகிறது.

ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் சிகாகோவில் நடைபெறும் ஜனநாயக தேசிய மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளர் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்படுவார். கட்சி முடிவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதற்கிடையே கமலா ஹாரிசை தோற்கடிப்பது எளிது என்கிறார் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப்.. ஆனால்.. வழக்கறிஞரா? குற்றவாளியா என சவால் விடுக்கிறார் கமலா ஹாரிஸ்... ஜனநாயக கட்சி அதிபர் தேர்வு ஒருபுறம் இருந்தாலும்... கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையே காரசார பிரசாரத்திற்கு பஞ்சமிருக்காது என்றே இப்போதைக்கு தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்