மனைவியை மயக்கிய அந்த ஒரு சொல் குழந்தையை நைசாக தூக்கிய கணவன் பல மாதங்கள் கழித்து உடைந்த உண்மை நொறுங்கிய இதயம்.. வெற்ற தாய் பாசம்
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்த கணவர், மனைவிக்கு தெரியாமல் தன் 3 மாத கைக்குழந்தையை விற்ற சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
கடனாக வாங்கிய பணத்தை, தன் குழந்தையை விற்று திருப்பி கொடுத்திருக்கிறார் ஒரு தந்தை... அதுவும் மனைவிக்கு தெரியாமல்...
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பங்காரப்பேட்டையை சேர்ந்த தம்பதி முனிராஜு - பவித்ரா...
தம்பதிக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது...
திருமணமான தொடக்கத்தில் இருந்தே, வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுபோதைக்கு அடிமையான முனிராஜு, வியாபாரம் செய்யபோவதாக கூறி பலரிடம் கடன் பெற்று வந்த நிலையில், இது ஒரு குழந்தைக்கு அப்பாவான பிறகு அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது...
இதனால், கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த அவர், வாங்கிய கடனை திருப்பி செலுத்த சில மாதங்களுக்கு முன்பு தன் 3 மாத கைக்குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்....
இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணுடன் சேர்ந்து, ஒரு தம்பதிக்கு தன் குழந்தையை முனிராஜு தத்து கொடுத்த நிலையில், அந்த தம்பதியும் முறைப்படி பதிவு செய்து குழந்தையை தத்து எடுத்துள்ளனர்...
இந்த விவகாரத்தை தன் மனைவியும், குழந்தையின் தாயுமான பவித்ராவுக்கு முனிராஜு தெரியப்படுத்தவில்லை.
குடும்ப வறுமையால் நண்பர் ஒருவரிடம் குழந்தையை வளர்க்க கொடுத்திருப்பதாக கூறி முனிராஜு நாடகமாடி இருக்கிறார்...
நாட்கள் கடந்தோடி இருக்கின்றன.... குழந்தையை பார்க்க தாய் மனம் துடித்திருக்கிறது...
இந்நிலையில், குழந்தையை பார்க்க வேண்டும் என பவித்ரா முனிராஜுடம் வற்புத்திய நிலையில், இந்த விவகாரம் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....
அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்த அவர் , தன் கணவர் மற்றும் தன் மகனை தத்துக்கொடுக்க உதவிய பெண் மீதும் போலீசில் புகாரளித்துள்ளார்....
இரு தரப்பையும் அழைத்து போலீசார் விசாரணையும் நடத்தி இருக்கின்றனர்...
முறைப்படி பதிவு செய்யப்பட்டு குழந்தை தத்துக்கொடுக்கப்பட்டதால், விவகாரத்தை கையாள சற்று சிரமப்பட்ட போலீசார், பின்னர் பணத்திற்காக குழந்தை விற்கப்பட்டிருப்பதும், தாய்க்கு தெரியாமலும், அவரின் அனுமதியில்லாமலும் குழந்தை விற்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி , குழந்தையை மீட்டு அவரின் தாயாரிடமே ஒப்படைத்திருக்கின்றனர்...
இந்த விவகாரத்தில், குழந்தையின் தந்தை மீதும் அவரிடம் இருந்து குழந்தையை தத்தெடுத்தவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
கடனாக வாங்கிய பணத்தை, தன் குழந்தையை விற்று தந்தை திருப்பி செலுத்திய சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கணவர் மீது போலீசில் புகாரளித்து மகனை மீட்ட தாய்ப்பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...