பற்றியெரியும் வங்கதேசம்... பார்வையை திருப்பிய மேற்குஉலகம்... வந்த முக்கிய வாய்ஸ்

x

வங்க தேசத்தில், அனைத்து தரப்பினரும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வங்க தேசத்தில், ஆளும் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம் மற்றும் வன்முறையை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும், ஆட்சி அமைக்கப்போவதாகவும் ராணுவ தளபதி அறிவித்தார். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. துணை செய்தி தொடர்பான ஃபர்ஹான் ஹக், வங்கதேச மக்களுடன் ஐநா நிற்பதாகவும், அவர்களது மனித உரிமை காக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.மேலும், அங்கு நடந்த வன்முறைகள் குறித்த வெளிப்படையான, சுதந்திரமான, பாராசபட்சமற்ற விசாரணை தேவை என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்