வங்கதேச தேசத்தந்தையின் சிலை மீது ஏறி சிறுநீர் கழித்த இளைஞர் - முகம் சுளிக்க வைத்த கேவல செயல்
வங்கதேச தேசத்தந்தையின் சிலை மீது ஏறி சிறுநீர் கழித்த இளைஞர் - முகம் சுளிக்க வைத்த கேவல செயல்
வங்கதேசத்தில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலை, புகைப்படங்கள் அவமதிக்கப்படும் காட்சிகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கதேச போராட்டத்தில் கலவரக்காரர்களால் ஷேக் ஹசீனா தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலை உடைக்கப்பட்டது. இப்போது சிலை மீது ஏறிய இளைஞர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் அவலமான வீடியோவும் வெளியாகியிருக்கிறது. பல இடங்களி அவரது புகைப்படங்களும் அவமதிக்கப்படும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது. வங்கதேச வரலாற்றில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் தந்தையென போற்றப்படுபவர். 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில் பாகிஸ்தான் அட்டூழியங்களில் ஈடுபட்ட போது, ஷேக் முஜிபுர் ரஹ்மான் சுதந்திர போராட்டத்தில் நாட்டை வழிநடத்தியவர். பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திர காற்றை சுவாசிக்க செய்தவர், நாட்டின் முதல் அதிபராக பதவி வகித்து வங்கதேசத்தை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இழிவுப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் செய்யும் செயல்கள் அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.