வங்கதேசத்தில்மீண்டும் வெடிக்கும் போராட்டம் - பரபரப்பு

x

வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு, அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் போராட்டத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகினார்... இந்நிலையில் தற்போதைய அதிபர் ஷஹாபுதீனுக்கு எதிராக 5 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படுகிறது... நள்ளிரவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர்... இருப்பினும் அவர்கள் அதிபருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 1972ல் இயற்றப்பட்ட அரசியலமைப்பை ஒழித்து புதிய அரசியலமைப்பை எழுத வேண்டும் எனவும், 2018, 2024ல் ஷேக் ஹசீனா ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட தேர்தல்களை செல்லாது என அறிவித்து வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்