பற்றி எரியும் வங்கதேசத்திற்கு பிரதமர் போட்ட போன்
வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்சனையைத் தொடர்ந்து, அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, இக்கால அரசு தலைமை ஆலோசகராக பேராசிரியர் முகமது யூனுஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரிடம், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் பிற அனைத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்து, விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று தாம் நம்புவதாக பிரதமர் மோடி கூறினார்.
Next Story