வங்கதேசத்தில் இந்து கோயில்கள் எரிப்பு... இந்துக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்...

x

வங்கதேசத்தில் இந்து கோயில்கள் எரிப்பு... இந்துக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்..

வங்கதேசத்திலிருந்து ஹசீனா வெளியேறியதை தொடர்ந்து இந்துக்கள் தாக்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல இடங்களில் இந்து கோயில்கள் தாக்கப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு சொந்தமான கடைகளில் புகுந்து கொள்ளையடிப்பு சம்பவங்களும் அங்கு அரங்கேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெகர்பூர் பகுதியில் இஸ்கான் கோயில் தாக்கப்பட்டிருக்கிறது. அங்கு கோயில் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. அங்கு தங்கியிருந்த 3 பக்தர்கள் எப்படியே உயிர் தப்பிவிட்டார்கள் எனவும் தெரியவந்துள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் இந்துக்களை கொண்ட தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்