உக்ரைன் போரில் பின்னடைவா? - புதின் நடவடிக்கையில் புதிய மாற்றம்
உக்ரைன் போரில் பின்னடைவா? - புதின் நடவடிக்கையில் புதிய மாற்றம்
உக்ரைன் மீது மிகப்பெரிய புதிய தாக்குதல் நடத்துவதற்கான அவசியம் இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இலக்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தேவையில்லை என்றும் ரஷ்யா உக்ரைனை அழிக்க விரும்பவில்லை எனவும் புதின் தெரிவித்தார்.
கஜகஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டின் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விளாடின்மிர் புடின் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், "மேலும் படைகளை அணிதிரட்டுவதற்கான எண்ணம் இல்லை" என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்த 8 மாத கால படையெடுப்பின் இறுதியில் உக்ரைன் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறி வரும் நிலையில் ரஷ்ய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து புதினின் தொனி சற்று மென்மையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.