அர்ஜெண்டினா துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி.. நொடியில் நடந்த திருப்பம்
அர்ஜெண்டினா துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி.. நொடியில் நடந்த திருப்பம்
கேமராக்கள் முன்னிலையில் அர்ஜெண்டினாவின் துணை அதிபரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் ஊழல் செய்ததாக கூறி அர்ஜெண்டினாவின் துணை அதிபர் க்றிஸ்டினா கிர்ச்னெர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள
நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு க்றிஸ்டினா வீடு திரும்பினார். அப்போது ஏராளமான ஊடகங்களும், அவரது ஆதரவாளர்களும்
வீட்டுக்கு வெளியே குவிந்திருந்த நிலையி, கூட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியை எடுத்து க்றிஸ்டினாவின் நெற்றியைக் குறி வைத்து சுட
முயன்றார். அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி வேலை செய்யாத நிலையில், துணை அதிபர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். உடனடியாக அந்த துப்பாக்கிதாரி கைது
செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் 5 தோட்டாக்கள் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து காவல்துறையினர் தொடர்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.