இஸ்ரேல் ராணுவ வீரர்கள் செய்த கொடூரம் - வெளியான நெஞ்சை நிறுத்தும் காட்சி
மேற்குகரை பகுதியில் 3 பாலஸ்தீனியர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம், இறந்த ஒருவரின் மீது வாகனத்தை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் முதல், ஹமாசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல், பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மேற்குகரை பகுதியில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் வீரர்கள், 3 பாலஸ்தீனியர்களை சுட்டுக் கொன்றனர். மேலும், இறந்த ஒருவரின் மீது ராணுவ வாகனத்தை ஏற்றினர். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
Next Story