பாடிபில்டர், நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட அர்னால்டு.. பிரிடேட்டர், டெர்மினேட்டர் படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவருக்கு குவியும் வாழ்த்துகள்
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் இன்று தனது 76 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மிகச்சிறந்த பாடி பில்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய அர்னால்டு, ஹாலிவுட் படங்களிலும் கதாநாயகனாக முத்திரை பதித்தார். பிரிடேட்டர், டெர்மினேட்டர் சீரிஸ், தி எக்ஸ்பேன்டபிள்ஸ் உள்ளிட்ட படங்களின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். இதுதவிர அரசியலிலும் கால்பதித்த அர்னால்டு, கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் அர்னால்டின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story