இந்திய வம்சாவளி வேட்பாளரை தோற்கடித்து மீண்டும் களமிறங்கும் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது... இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்... அவருக்குப் போட்டியாக குடியரசு கட்சி சார்பில் மீண்டும் குதித்துள்ளார் முன்னாள் அதிபர் ட்ரம்ப்... குடியரசுக் கட்சியில் ட்ரம்பிற்கு கடுமையான போட்டியாளராகக் கருதப்பட்ட இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, தான் அதிபர் தேர்தல் பந்தயத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், ட்ரம்பிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தார்... ஆனால் விடாப்பிடியாக போட்டி போட்டார் நிக்கி ஹாலே... இந்நிலையில், குடியரசுக் கட்சிக்கான அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நியூ ஹேம்ப்ஷயர் மாநிலத்தில் நடைபெற்றது... அதில் நிக்கியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார் ட்ரம்ப்... இது நிக்கிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது...