50 வருடம் தவம் இருந்து நிலவில் கால்பதித்த தனியார் விண்கலம்

x

அமெரிக்காவின் தனியார் நிறுவனம் தயாரித்த ரோபோ விண்கலம் வெற்றிகரமாக இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கியது. நாசாவின் வழிகாட்டுதலின்படி இன்டியூடிவ் மிஷின்ஸ் (Intuitive Machines) என்ற தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட IM-1 என்ற ரோபோ விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அதன் ஒடிசியஸ் லேண்டர் திட்டமிட்டபடி இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கியது. இதனை டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசா மையத்திலிருந்து நேரில் கண்டுகளித்த விஞ்ஞானிகளும் , விண்கலத்தை உருவாக்கிய தனியார் நிறுவன ஊழியர்களும் கைதட்டி மகிழ்ந்தனர். அமெரிக்கா 50 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் நிறுவனம் உருவாக்கிய விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மீண்டும் சாதனை படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்