எல்லையில் அமெரிக்கா.. பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்த வடகொரியா | America | Thanthitv

x

மே 13ம் தேதி முதல் 24ம் தேதிக்கு இடையில் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது RC-135, U-2S உளவு விமானங்கள் மற்றும் RQ-4B ட்ரோன்கள் என 16 விமானங்களை பறக்கவிட்டதாக வட கொரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் கிம் கேங் இல் குற்றம் சாட்டினார்... தென் கொரியாவின் கடற்படை மற்றும் கடலோர காவல்படை ரோந்து நடவடிக்கைகளை முடுக்கி விடுவதன் மூலம் ராணுவ பதட்டத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்தார். தென் கொரியாவில் இருந்து பலூன்களில் அனுப்பப்பட்ட பிரச்சார துண்டுப் பிரசுரங்களை அவர் கடுமையாக விமர்சித்தார்... தென் கொரியாவில் உள்ள வட கொரிய எதிர்ப்பாளர்கள் உணவு, மருந்து, பணம், மினி ரேடியோக்கள் மற்றும் தென் கொரிய செய்திகள், நாடகங்களுடன் கூடிய USB ஸ்டிக்குகள் மற்றும் வடகொரிய எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை பலூன்களில் கட்டி விடுவதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்