அமெரிக்க அதிபர் தேர்தல்.. முன்கூட்டியே வாக்களித்த ஜோ பைடன் - என்ன காரணம்?

x

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்பும், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். முன்னதாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், முதுமை மற்றும் சொந்த கட்சியினரின் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலருக்கு, தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. அதன்படி, தமது சொந்த மாகாணமான டெலாவரில், நியூ காஸ்டில் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் அதிபர் பைடன் தமது வாக்கை பதிவு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்