உறுதியாக சொன்ன ட்ரம்ப்... ஓகே சொன்ன எலான்... அமைச்சராகும் டெஸ்லா ஓனர்..?
அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றால், எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பொறுப்பு வழங்குவேன் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு, எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ஆதரவளித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ட்ரம்ப், தான் அதிபராக வெற்றி பெற்றால், எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவியோ, அல்லது ஆலோசகர் பதவியோ அளிப்பேன் என தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்வதாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், நாட்டுக்கு சேவையாற்ற காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story