நேருக்கு நேர்... மேடையேறிய டிரம்ப் பேத்தி... மொத்தமாக அமெரிக்காவையும் திரும்ப வைத்த பேச்சு
அமெரிக்கா அதிபர் தேர்தல் பிரசார களத்திற்கு டொனால்டு டிரம்ப் பேத்தி வந்தது குடியரசு கட்சியினரை மகிழ்ச்சியில் ஸ்தம்பிக்கச் செய்தது.
அமெரிக்காவின் மில்வாக்கி நகரில் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் பேத்தி காய் டிரம்ப்பை அவரது தந்தை ஜூனியர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்தார். மேடையில் பேசிய காய் டிரம்ப், தன்னுடைய தாத்தாவின் பாசத்தை கூறி நெகிழ்ந்தார். தன்னுடைய தாத்தாவும் சாதாரண தாத்தா போல்தான்... எனது பெற்றோர் வீட்டில் இல்லாத போது அக்கறையாக பார்த்துக்கொள்வார் என்றார். தாத்தா சுடப்பட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்ததாக குறிப்பிட்ட காய் டிரம்ப், இந்த மாதிரி ஒரு செயலை செய்வார் என்று நினைக்கும் போதே கவலையளிக்கிறது என்றார். தாத்தா நீங்கள்தான் எனக்கு எப்போதும் உத்வேம் அளிப்பவர் என காய் டிரம்ப் மேடையில் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த டிரம்ப், மகிழ்ச்சியில் பூரித்திருந்தார்.