20 ஆண்டுகளுக்கு பிறகு... திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை - உற்சாக வெள்ளத்தில் மக்கள்

x

திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியன்பள்ளி வரையிலான புதிய அகல ரயில்பாதை பணிகள், 294 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று வேதாரண்யத்தில் புதிய அகல ரயில் பாதையில், பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருத்துறைப்பூண்டியில் இருந்து கிளம்பி அகஸ்தியன்பள்ளி சென்றடைந்த புதிய ரயிலுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த ரயில்சேவை வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்களில் காலை மற்றும் மாலை என இருவேளை இயக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்