அன்று உலகையே வியக்க வைத்த தரமான சம்பவம்... மாஸ் அப்டேட் கொடுத்த இஸ்ரோ

x

அன்று உலகையே வியக்க வைத்த தரமான சம்பவம்... மாஸ் அப்டேட் கொடுத்த இஸ்ரோ

தனது சுற்றுவட்ட பாதையில் முதல் சுற்றை வெற்றிகரமாக சுற்றி வந்த ஆதித்யா எல் 1 விண்கலம்,

இரண்டாவது ஹாலோ ஆர்பிட் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக பயணிக்க தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோவின் சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி, சூரியனின் மேற்புற வளிமண்டல அடுக்கான குரோமோஸ்பியர் மற்றும் கொரோனா ஆகியவற்றை குறித்து ஆராயவும் சூரியனிலிருந்து வெளிவரும் அயனியாக்கப்பட்ட துகள்களின் தன்மை மற்றும் அளவு குறித்து ஆராயவும் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக தனது முதல் ஹலோ ஆர்பிட் சுற்றுவட்ட பாதையில் முதல் சுற்றை நிறைவு செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்த சுற்றுவட்ட பாதையை நிறைவு செய்ய 178 நாட்களை விண்கலம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் தற்போது விண்கலம் இரண்டாவது ஹாலோ ஆர்பிட்டில் தனது பாதையை வெற்றிகரமாக மாற்றி சிறப்பாக பயணித்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்