இஸ்ரேல் போரில் 4 நாட்களுக்கு பின் ஒரு ட்விஸ்ட்.. ஆப் செய்த கத்தார்
காசாவில் உள்ள பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிப்பதற்கும், இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர் கைதிகளை விடுதலை செய்வதற்காகவும் உடன்பாடு எட்டப்பட்டு 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பணயக் கைதிகளை மேலும் விடுவிப்பதற்கு ஏதுவாக கத்தார், எகிப்து அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு எட்டப்பட்டதாக, கத்தார் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மஜித் அல் அன்சாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் 20 பணயக் கைதிகளும், 60 பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். இதனிடையே, இஸ்ரேல் ராணுவம் மேலும் 33 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்துள்ளது. இதே போன்று, காசாவில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 11 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பும் விடுவித்துள்ளது.
Next Story