பிரதமரானார் ஓரினச்சேர்க்கையாளர்... பிரான்சில் அரங்கேறிய திடீர் மாற்றம் | France
34 வயதான கேப்ரியல் அட்டல் இதற்கு முன் கல்வி அமைச்சராக இருந்துள்ளார்... தன்னை வெளிப்படையாகவே ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்தார்... பிரான்ஸ் அரசு கொண்டு வந்த குடியேற்ற சட்டத்தால் போராட்டங்கள் வெடித்த நிலையில், அந்நாட்டு அதிபர் மேக்ரான் மீது அதிருப்தி எழுந்தது... பிரதமர் எலிசபெத் போர்னுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன... இந்நிலையில், இடைத்தேர்தலில் தோல்வியடைந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது இமானுவேல் மேக்ரான் அரசு... இதையடுத்து அவர் அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்தார்... இதைத் தொடர்ந்து எலிசபெத் போர்ன் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், கேப்ரியல் அட்டலை புதிய பிரதமராக மேக்ரான் அறிவித்துள்ளார்.
Next Story