மொராக்கோ நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்... பொழுது போக்கில் சிகரம் தொடும் மொராக்கோ...

x

ஆப்ரிக்காவுக்கும்... ஐரோப்பாவுக்கும் நட்ட நடுவுல... செட்டிலாகி இருக்குற ஒரு சூப்பரான சுற்றுலா நாடு தான் இந்த morocco

என்ன தான் இந்த நாடு வட ஆப்பிரிகாவுல இருந்தாலும்... நாம வழக்கமா பாக்குற ஆப்பிரிக்க நாடு மாதிரி இல்லாம... அரபு, ரோமன், ஸ்பேனிஸ்னு பல நாடுகளோட கலவையான கலாச்சாரத்தை கொண்ட நாடு இது.

உலகத்துலயே ரொம்ப பழைமையான நகரங்கள் பட்டியல்ல முக்கியமான இடத்த பிடிச்சுருக்கிற இந்த நாட்டுல, பல இடங்கல புராதான சின்னங்களா அறிவிச்சு பாதுக்கத்துக்கிட்டு வராங்க... இப்படி எங்க பார்த்தாலும் ஹிஸ்ட்ரிகள் டச்சோட இருக்றதாலேயே.... இந்த நாடு படபிடிப்புகளுக்கு ஏத்த லொக்கேஸன்ஸாவும் மாறி இருக்கு...

நம்ம ஊர்லலாம் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள டீ குடுத்து விருந்தோம்பல் பண்ற மாதிரி... இந்த ஊர்ல வீட்டுக்கு வர்ர கெஸ்ட்ட வரவேற்குறதுக்கு விஸ்கி தான் கொடுப்பாங்களாம்..... உடனே ஆ...னு வாய பொளக்காதீங்க... கிரீன் டீ ய தான் இங்க விஸ்கினு சொல்றாங்க...

சரி வாங்க விஸ்க்கிய அதாவது க்ரீன் டீய வெல்கம் ட்ரிங்கா குடிச்சுட்டு... ஊருக்குள்ள இறங்கி அலப்பறைய கொடுக்கலாம்...

ஊருக்குள்ள வந்ததும் வலது கால் எடுத்து வச்ச இடம் Marrakech-ல இருக்ற இந்த KOUTOUBIA MOSQE...

12 ஆம் நூற்றான்டுல கட்டப்பட்ட இந்த மசூதி வெறும் வழிபாட்டு ஸ்தலமா மட்டுமா இல்லாம... இந்த சிட்டியோட வரலாற்று சின்னமாவும் இருக்கு...

தொழுகை நடத்துறதுக்கே இப்படி பிரமான்டமான கட்டிடத்த கட்டுன இந்த நாட்டு மன்னர்கள்.. அவங்க அரண்மனைகள மட்டும் என்ன சாதாரனமாவா கட்டியிருப்பாங்க? அதுக்கு ஒரு சூப்பரான sampile தான் இந்த El Badi Palace...

El Badi-ங்குற இந்த அரண்மனைக்குள்ள நுழைஞ்சதும்... அங்க இருந்த ஒருத்தர் கிட்ட அரண்மனையோட எஸ் டி டி ய கொஞ்சம் சொல்லுங்களேனு கேட்டோம்...

1500 ஆம் ஆண்டோட கடைசி பகுதியில தான் இந்த அரண்மைனைய கட்டி இருகாங்க, இத கட்றதுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள உலகத்துல இருக்க பல நாடுகள்ள இருந்து இறக்குமதி பண்ணி இருக்காங்கலாம்... உதாரணமா தங்கம் , பளிங்கு கற்கள்னு... கட்டுமானத்துக்கு தேவையான Carrara marble-ஸ்ஸ இத்தாலில இருந்து கொண்டு வந்திருக்காங்களாம்...

சரி ஏதோ வைரம், தங்கம் இட்டாலி மார்பில்ஸ்னு கலர்கலரா சொன்னாங்க ஆனா வெறும் கட்டம் மட்டும் தான் இருக்குதுனு லோக்கள் கைடுகிட்ட கேட்டோம்... அப்போதான்... அட அத ஏங்க கேக்குறிங்கனு சலிப்போட ஒரு துயரக்கதைய சொன்னாரு.

வீட்ட காலி பண்ணும் போது... நான் வாழ்ந்த வீட்டுல கடைசிய ஒரு முறை உட்காந்து பார்த்துட்டு போறேனு சொல்லுற மாதிரி, இங்க இருந்த மன்னர் ஆட்சிய இழந்துட்டு வேற இடத்துக்கு போகும் போது அரண்மனையில இருந்த விலை உயர்ந்த இன்டீரியர் ஒர்க் அத்தனையையும், கடப்பரையால பேர்த்து... சொரன்டி எடுத்துட்டு போய்ட்டாரம்.

அந்த ராஜாவ மாதிரியே நாமலும் இப்போ இங்க இருந்து கிளம்ப வேன்டிய நேரம் வந்துடுச்சு , அதுனால நம்ம கண்ணுக்கு குளிர்ச்சியான ஒரு தோட்டத்த சுத்திப்பார்க்க போகலாம்.

ஊருக்கு நடுவுல திடீர்னு காடு வளர்ந்த மாதிரி இருக்குற இந்த இடத்தோட பேரு... majorelle gardens... வீக்கண்டுல எந்த சத்தமும் இல்லாம, மனசுக்கு நிம்மதியா ரிலாக்ஸ்ஸா, உட்காந்து எஞ்சாய் பண்றதுக்கு... ஏத்த இடம்.

வழக்கமா நிஜத்துல இருக்குற ஏதாவது ஒரு விசயத்த பார்த்து இன்ஸ்பெயர் ஆகி தான் ஓவியமா வரைவாங்க... ஆனா இந்த தோட்டத்த கற்பனையில வரைஞ்சு, கடைசியா அத நிஜமா உருவாக்கியிருக்காங்க.

அதோட பலன் தான் இப்போ நாம ரசிச்சுக்கிட்டு இருக்குற இந்த majorelle gardens.

நாள் முழுக்க வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்குற மக்கள் , வெளிய வந்து நாளு மக்க மனுசங்கல பாக்கனுமேனு நெனச்ச உடனே இந்த இடத்துக்கு தான் வருவாங்களாம்...

அதாவது விநாயகர் அப்பா அம்மாவ சுத்தி வந்து ஞானப்பழம் வாங்குன மாதிரி, இந்த ஒத்த இடத்த சுத்திப்பார்த்தாலே மொத்த MOROCCO வையும் பார்த்த மாதிரியாம்.

ஏன்னா இந்த நட்டோட பாரம்பரியமான பல விசயங்களும் இந்த ஒரே இடத்துல இருக்குனா பாத்துக்கோங்களேன்...

பாக்குறதுக்கு நம்ம ஊரு ரங்கநாதன் ஸ்ட்ரீட் மாதிரி மக்கள் கூட்டம் இருக்கிற இது தான் Jemaa El Fna...

அதுலயும் பொழுது சாய ஆரம்பிச்சுட்டா போதும், இவங்களோட ஆட்டமே வேறமாதிரி இருக்குமாம்,

குறிப்பா சொல்லனும்னா.... ஸ்ட்ரீட் ஃபுட், ஸாப்பிங், பாட்டு, டான்ஸ்னு இன்ட்ரஸ்டிங்கான சின்ன சின்ன கேம்ஸ்னு என்டர்டெயின்மென்ட்கு இங்க பஞ்சமே இருக்காது.

இதுல இன்னொரு சுவாரஸ்யமான விசயம் என்னனா... morocco-க்கும் கலர்ஸூக்கும் எப்பவுமே நெருக்கம் அதிகம்... அதுனால தான் நாம இருக்குற இந்த marrakesh சிட்டிய red city-னு சொல்றாங்க.

அதே மாதிரி இன்னொரு கலர் பேர்லயே இருக்குற கலர் ஃபுல்லான சிட்டிய பாக்காம போனா சாமிக்குத்தமாகிடும் அதுனால... அதையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம் வாங்க...

morocco-ல இருக்குற இந்த சிட்டியோட பேரு CHEFCHAOUEN...

இந்த ஊருல என்ன ஸ்பெசல்னா இந்த வீடுகள்ளோட பெயிண்ட் தான்.

இங்க இருக்குற பெரும்பாலான வீடுகள் ப்ளூக் கலர்ல தான் இருக்கும்.

ஒரு வேல சந்தர்ப்ப சூழ் நிலையால வேற கலர் பெயின்ட் அடுச்சாலும்,

"பெயின்டர் தம்பி எல்லாம் ஓகே , அந்த ஓரத்துல லைட்டா ஃபுளூக்கலர் கோடு மட்டும் போட்டு விட்டுப்பா "

அப்படினு சொல்லி புளூவுக்கும் தங்களுகுமான பாரம்பரியத்த காப்பத்திக்றாங்கலாம், அதனால தான் இந்த ஊர blue city னு சொல்றாங்க..

எண்டர்டெயின் மட்டுமில்லங்க , அட்வெஞ்சர்ஸ் பிரியர்களுக்கும் இந்த சிட்டி பெஸ்ட் ஜாய்ஸ்னு சொல்றாங்க... ஏனா இந்த நகரத்தோட மொத்த அழகையும் டாப் வீவ்ல காட்டுறதுக்ககாவே காத்துக்கிட்டு இருக்கு, Hot Air Balloon Ride...

அட... என்னங்க பொட்டிக்குள்ள போட்டு அடச்சு மேல தூக்கிட்டு போறதெல்லாம் ஒரு பெரிய விசயமா.. நாலாம் சுதந்திர பறவை தனியா தான் பறப்பேன்னு அடம்பிடிக்குறவங்களுக்காக தான் இந்த பாரா கிலைடிங் ரெக்க கட்டி ரெடியா இருக்கு...

சரி... சரி.. பறந்தது போதும், இந்த பாலைவனத்தோட ஃபேமஸ்ஸான Quad Biking-ல ஒரு ரைட் போய்ட்டு வரலாம் வாங்க...

ஆகாயம், காத்து, நிலம்னு எல்லா இடத்துலயும் மாஸ் காட்டுறவங்களுக்கு அடுத்ததா கத்திருக்கிற சர்ப்ரைஸ் தான் இந்த surfing spot...

அலை சறுக்க அதிகமா விரும்புறவங்க கண்டிப்ப chose பண்ண வேண்டிய இடம் தான் இது...

சர்ஃபிங் மட்டுமில்லாம எக்கச்சக்கமான watter games-ம் இங்க இருக்கு.

வேடிக்கை பாத்து டைம் வேஸ்ட் பண்ணாமா... உள்ள போய் ஒரு ஆட்டத்தை போடலாம் வாங்க...

கடலத்தான் கதி கலங்க வைக்றாங்கனு பார்த்தா , கரை புரண்டு ஓடுற ஆத்த கூட விட்டு வைக்கல இந்த ஊரு இளந்தாரி பயலுக...

நம்ம ஊர்ல வெள்ளம் வந்தா என்ன பண்ணுவோம், எல்லாரும் உயரமான இடத்த நோக்கி ஓடுங்கனு எச்சரிக்கை குடுத்துட்டு... நாமளும் ஒய்யாரமா சேஃப்பா போய் உக்காந்துப்போம்...

ஆன இந்த ஊர் பசங்க, மழை காலத்துல ஆத்துல வெள்ளம் போக ஆரம்பிச்சுடுச்சுனா Rafting பண்ண கிளம்பிட்றாங்க...

நம்மலோட அட்வெஞ்சர் ட்ரிப்பல்லம் முடிச்சிட்டு கரையேறி வந்தா , ஒரு குரூப் மட்டும் வித்யாசமான காஸ்டியூம்ல ஊர்வலமா போய்க்கிட்டு இருந்தாங்க... என்ன நடக்குதுனு எட்டிப்பாத்தா... இந்த ஊரோட ஐகானிக் ஃபெஸ்டிவலான Gnaoua Festival ஸ்டார்ட் ஆடுச்சுங்க...

யப்பா... யப்பா... யப்பா... ஊரு... தெரு...திருவிழானு... எல்லாத்தையும் சுத்தி பாத்து ரொம்பவே டயார்ட் ஆகிட்டோம் அதுனால... இந்த ஊர் சாப்பாட்ட சாப்ட்டு எனர்ஜிய ஏத்திக்கலாம் வாங்க...

நம்ம ஊருல மணக்க மணக்க மண் பானைல கோழி குழம்பு செய்யுற மாதிரி... இந்த ஊருல வித்தியாசமான பாத்திரத்துல கோழி குழம்பு ரெடியாகுது... சரி இந்த டிஸ்ஸுக்கு பேரு என்னனு கேட்டா ஏதோ tagine- ஆம்...

பெரிய பசிய கூட சமாளிச்சுடலாம்... ஆனா இந்த குட்டி பசிய சமாளிக்கவே முடியாது... சோ அதுக்கு சரியான தீர்வு குடுக்குது இந்த bastilla...

மைன்ட்ட ரிலாக்ஸ் பண்ண டீ, காஃபி குடிக்குற மாதிரி... இந்த ஊர் ஓட்டல்ல கிடைக்குற bissara சூப்ப குடிச்சு பாருங்க... சும்மா வேற லெவல்ல இருக்கும்...

நம்ம ஊர்ரல எல்லா தெருக்கள்லயும் போண்டா... பஜ்ஜி... கிடைக்குற மாதிரி... இந்த ஊர்ல எங்கேயும் எப்போது கிடைக்குற ஈவ்னிங் ஸ்னாக்ஸ்னா அது தான் kefta...

ஊரா இருந்தாலும் சரி... சோறா இருந்தாலும் சரி... நம்மள தங்கவச்சு... திங்க வச்சு அழகு பாக்குற இந்த morocco-க்கு எத்தனை தடவை வந்தாலும் திகட்டாதுனே சொல்லலாம்... அடுத்து டூர்ல மீட் பண்றேன் பாய்ய்ய்ய்….


Next Story

மேலும் செய்திகள்