நடுக்கடலில் 48 மணி நேரம்..பசி பட்டினியுடன் நடத்திய போராட்டம்..எண்ணிய கடைசி நிமிடங்கள்
தமிழகத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக கடந்த இரு தினங்களுக்கு முன் அரபிக் கடலுக்குச் சென்றார். படகில் மீன் பிடித்தபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து, அந்த மீனவர், சுமார் 43 மணி நேரம் கடலில் இருந்து கரையை நோக்கி நீந்திய வண்ணம் வந்தார். உடுப்பி மாவட்ட கடற்கரையிலிருந்து 18 நாட்டிகல் மைல் தொலைவில் அவர் உயிருக்கு போராடி நீந்தியதை கண்ட மீனவர்கள், அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின் பத்திரமாக தமிழகம் அனுப்பிவைத்தனர். இளைஞரின் விவரங்களை கேட்காத அந்த மீனவர்கள், 43 மணி நேரம் தொடர்ந்து கடலில் நீந்துவது சாதாரண விஷயம் அல்ல என்றும், மன உறுதி அதிகம் இருந்ததால் அவர் உயிர்பிழைத்ததாகவும் கூறினர்.
Next Story