3ம் உலகப் போர்..பூனைக்கு மணி கட்டி விட்ட அமெரிக்க அதிபர் தேர்தல்
உறக்கத்தில் உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிபர் ஜோ பைடன் மற்றும் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்க யார் முயற்சிக்கப்போகிறார்கள்?... எங்கு பார்த்தாலும் குண்டுமழை பொழிகிறது... ஆனால், கலிபோர்னியாவில் உள்ள கடற்கரையில், அதிபர் ஜோ பைடன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மறுபுறம் கமலா ஹாரிஸ் பேருந்து பயண பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் டிரம்ப் விமர்சித்தார். இதுபோன்றவர்களின் செயல்பாடுகளால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாகவும், டெனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.