"இயற்கையான கூட்டாளிகள்" - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
x
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, சிகாகோவில் சரித்திர புகழ் பெற்ற தனது உரையை துவங்கும் முன்பாக சுவாமி விவேகானந்தர் ஜப்பான் நாட்டுக்கு வந்திருந்தார் என்றும், இது அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என குறிப்பிட்டார். வன்முறை மற்றும் தீவிரவாதத்தில் இருந்து மனித குலத்தை காக்க, புத்தர் காட்டிய பாதையை உலகம் பின்பற்ற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். பருவநிலை மாற்றம் தற்போதைய சவாலாக இருப்பதாகவும் இந்திய அதற்கான தீர்வுகளை எதிர் நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். மும்பை - அகமதாபாத் அதி வேக ரயில் திட்டம், டெல்லி, மும்பை தொழில் வழித்தடம் போன்றவை இந்திய - ஜப்பான் ஒத்துழைப்பிற்கு மாபெரும் உதாரணம் என்றார். இந்தியாவும் ஜப்பானும் இயற்கையான கூட்டாளிகள் என குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் ஜப்பான் மிக முக்கிய பங்கு வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்