"டென்மார்க் மக்களுக்கும் இதனை கற்றுக் கொடுங்கள்" - பிரதமர் மோடி

இந்தியாவின் சக்தி அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த உலகின் சக்தியும் அதிகரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
x
இந்தியாவின் சக்தி அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த உலகின் சக்தியும் அதிகரிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், இரண்டாவது நாளாக டென்மார்க் சென்றுள்ள மோடி, அந்நாட்டு தலைநகர் கோபன்ஹகேனில் உள்ள பெல்லா செண்டர் அரங்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ஒரு இந்தியர் உலகில் எங்கெல்லாம் செல்கிறார்களோ, அங்கெல்லாம் அந்த மண்ணுக்காக, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதாக பாராட்டு தெரிவித்தார். மேலும், உள்ளடக்கமும் கலாச்சார பன்முகத்தன்மையும், இந்தியர்களின் சக்தியாக விளங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், நமது மொழிகள் எதுவாக இருந்தாலும் நாம் அனைவரும் இந்திய கலாச்சாரத்தை கொண்டிருப்பதாகவும் கூறினார். முன்னதாக, ஒரு அரசியல்வாதியை எப்படி வரவேற்க வேண்டும் என்பது, இந்தியர்களுக்கு நன்கு தெரிந்துள்ளதாகவும், டென்மார்க் மக்களுக்கும் இதனை கற்றுக் கொடுக்குமாறு புன்முறுவலுடன் தெரிவிக்க, வெளிநாடுவாழ் இந்தியர்கள் "மேட்டே மேட்டே" என முழக்கங்களை எழுப்பி உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ்வின் போது, டென்மார்க் பிரதமர் மேட்டே ஃபிரட்ரிக்சனும் உடனிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்