பரபரப்பான சூழலில் ரஷ்யா சென்று புதினை சந்திக்கும் ஐநா பொதுச்செயலாளர் - நோக்கம் என்ன?
உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் சூழலில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்ய அதிபர் புதினை வரும் 26 ஆம் தேதி சந்திக்க உள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இரு நாட்டின் அதிபர்களை நேரில் சந்தித்து பேச உள்ளதாக இருவருக்கும் குட்டரெஸ் அண்மையில் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக வரும் 26 ஆம் தேதி மாஸ்கோ செல்லும் அன்டோனியோ குட்டரெஸ், ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச உள்ளதாக ஐ.நா. செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story