இந்தியா மிகப்பெரிய உதவி செய்துள்ளது - இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்
பன்னாட்டு நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்க பலமாக உள்ளதாகத் தெரிவித்ததாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்க பலமாக உள்ளதாகத் தெரிவித்ததாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உயர்வை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்த அவர், இலங்கை அரசு இதனை பரிவுடன் புரிந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். இலங்கை நிதியமைச்சர் அலிசாப்ரோ தலைமையிலான பன்னாட்டு நிதியத்துடனான ஆலோசனைக் கூட்டத்திற்காக வாஷிங்டன் சென்றுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் தங்களுக்கு பக்க பலமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும், மற்றும் சர்வதேச நிதியுதவி கிடைக்க ஏறக்குறைய ஆறு மாதங்களாவது ஆகும் என்றும் கூறினார். 2 அல்லது 4 தவணைகளில் உதவி கிடைக்கப் பெறலாம் என்று தெரிவித்த அவர், இந்தியா மிகப்பெரிய உதவி செய்துள்ளதாகவும், சீனா, ஜப்பான், வளைகுடா நாடுகளையும் அணுகி உள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே இந்தியா 2.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், மேலும் 500 மில்லியன் டாலர்களை எரிபொருள் வாங்குவதற்காக சுழல் நிதியாக இந்தியா அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Next Story