உக்ரைன் செல்லும் அமெரிக்க அதிபர்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உக்ரைன் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உக்ரைன் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அண்மையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் தனித்து விடப்படவில்லை, உக்ரைன் மக்களோடு தாங்கள் இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் அதிபரை ஜெலன்ஸ்கியை உக்ரைன் தலைநகரான கீவில் வைத்து சந்தித்தார். இந்நிலையில், அமெரிக்காவும் தன் பங்கிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து வர உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறது.  பெரும்பாலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அல்லது ராணுவ அமைச்சர் ஆஸ்டின் உக்ரைன் செல்ல வாய்ப்பிருப்பதாகவும், இருந்த போதும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸின் செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


  


Next Story

மேலும் செய்திகள்