விண்வெளியில் மாட்டு இறைச்சி... கொல்லாமல் ருசி பார்க்கலாம் - நாசாவின் அசத்தல் திட்டம்!

விண்வெளியில் விரைவில் மாட்டு இறைச்சியை வளர்க்க நாசா முடிவு செய்துள்ளது...
x
விண்வெளியில் மாட்டு இறைச்சி... கொல்லாமல் ருசி பார்க்கலாம் - நாசாவின் அசத்தல் திட்டம்!

விண்வெளியில் விரைவில் மாட்டு இறைச்சியை வளர்க்க நாசா முடிவு செய்துள்ளது... இறைச்சியை விண்வெளியில் வளர்க்க முடியுமா? என்பது குறித்து அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு... நிலாவை பார்த்து சாப்பிட்ட காலம் போய்... நிலாவிற்கு சென்று சாப்பிடலாம் வாங்க... என மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது, அமெரிக்காவின் நாசா நிறுவனம். நிலாவிற்கு போறது சரி.... அங்கு என்ன சாப்பாடு கிடைக்கும்? என உணவு பிரியர்களின் மைண்ட் வாய்ஸை கரக்ட்டாக கேட்ச் செய்து கொண்டதாலோ என்னவோ... விண்வெளியில் முதலில் கீரை வளர்ப்பில் ஈடுபட்டு வெற்றி கண்ட நாசா.... தற்போது அசைவ பிரியர்களை கவர இறைச்சி வளர்ப்பில் ஈடுபடவுள்ளது...

விண்வெளியில் இறைச்சி வளர்ப்பது இது ஒன்றும் புதிதல்ல... ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டே இதில் வெற்றி கண்டது, அலெஃப் ஃபார்ம்ஸ் என்ற உணவு தொழில்நுட்ப நிறுவனம். விலங்குகளை கொல்லாமல்? இறைச்சியை ருசிபார்க்கலாம் என்பது... பாவ கணக்கு பார்ப்பவர்களுக்கு கூடுதல் குட் நியூஸ். கற்பனைக்கு எட்டாத இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியமாயிற்று? என, கேட்போருக்கு ஆர்வம் எழுவதுண்டு...

நவீன உலகில் இதெல்லாம் சர்வ சாதாரணம்ங்க என செய்தே காட்டிவிட்டது, அலெஃப் ஃபார்ம்ஸ் நிறுவனம். பசுவிலிருந்து சில செல்களை எடுத்து அதற்குத் தேவையான ஊட்டச்சத்துகளை கொடுத்து.... பற்றா குறைக்கு 3டி பயோ பிரிண்ட்டிங் சொல்யூசன்ஸ் என்ற தொழில்நுட்பத்தை புகுத்தி.... செல்கள் வளர ஏதுவான சுழலை அமைத்து செயற்கை முறையில் மாட்டு இறைச்சி வளர்க்கப்படுகிறது.

தற்போது இதை போன்று சர்வதேச விண்வெளி மையத்தின் உதவியோடு, விண்வெளியில் மாட்டு இறைச்சியை இயற்கை முறையில் வளர்க்க தயாராகி வருகிறது, நாசா. அதாவது பசுவில் இருந்து சில செல்களை எடுத்து, பயோ ரியாக்டர்கள் மூலம் நுண் ஈர்ப்பு விசையில் ஸ்டெம் செல்களை வளர்த்து, அவை தசையாக உருவாகும் வரை செல்களை பெருக்கி, வேறுபடுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும் என்கின்றனர், விஞ்ஞானிகள்.

 உணவு பற்றாக்குறையை போக்குவதற்கும், இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்கவும்... இத்தகையை ஆராய்ச்சிகள் பெரிதும் உதவும் என்றாலும், இதன் விலை தான் நம்மை தலை சுற்றவைக்கிறது. அலெஃப் ஃபார்ம்ஸ் நிறுவனம் விண்வெளியில் வைத்து தயாரித்த ஒரு மெல்லிய இறைச்சி துண்டின் விலை மட்டும் இந்திய மதிப்புப்படி, மூவாயிரம் ரூபாயாம்... விரைவில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூரில் இந்த இறைச்சி விற்பனைக்கு வர இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்