"நாடு பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது" - மகிந்த ராஜபக்சே பேச்சு

இலங்கையில் பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே உரையாற்றினார்.
x
இலங்கையில் பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்சே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றாலும் நாடு பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார். நாடு மூடப்பட்டதால் அந்நியச் செலாவணி வருகை தடைபட்டது என்றும், கடலில் எண்ணெய்க் கப்பல்கள் இருந்தாலும் அதை இறக்குவதற்கு பணம் இல்லாததால் மக்களை இருளில் தள்ள வேண்டியுள்ளது என குறிப்பிட்டார். எரிவாயுவுக்காக வரிசையில் நிற்கும் பெண்களின் துயரத்தை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும், நாட்டு மக்களிடையே இருந்த மரண பயத்தை ஒழித்து 30 வருடகால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார். நெருக்கடியிலிருந்து மீள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும், வெளிநாட்டில் இருந்து உதவியை நாடும் போது நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்க முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். குடும்ப ஆட்சி தான் பிரச்சினை என்றால் அதனை கைவிட ஏற்பாடுகளை செய்து விட்டதாக கூறிய அவர், மக்களின் எதிர்ப்பைக் கேட்டு ஒட்டுமொத்த அமைச்சரவையும் தானாக முன்வந்து ராஜினாமா செய்தது என கூறினார். நாடாளுமன்றத்தில் 225 பெரும் வேண்டாம் என்ற கோஷம் இப்போது கேட்கிறது என்றும், ஜனநாயக அமைப்பை நிராகரிக்க வேண்டும் என்றால் அதன் ஆபத்தை வரலாற்றைப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.போராடும் இளைஞர்களின் எதிர்ப்பை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தமக்கும் தனது குடும்பத்துக்கும் இது வரை இழைக்கப்பட்ட அவமானங்களும் சாபங்களும் அதிகம் என ராஜபக்சே தெரிவித்துள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் பொறுமையாக செயலாற்றுவோம் என்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

Next Story

மேலும் செய்திகள்