கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு - புதிய பிரதமர் யார்?
பாகிஸ்தானின் புதிய பிரதமராக அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்(Shehbaz Sharif) தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து அவர் பெரும்பான்மை இழந்தார். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் புதிய பிரதமராக எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story