பாகிஸ்தானில் கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு!

பாகிஸ்தானில் கவிழ்ந்தது இம்ரான்கான் அரசு
x

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 174 உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று காலை நடைபெற இருந்த சூழலில் சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தார். இதனையடுத்து, சுமார் 13 மணி நேரத்திற்குப் பிறகு நள்ளிரவில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆசாத் குவைசர் மற்றும் துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து இடைக்கால சபாநாயகர் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தினார். 342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானத்திற்கு ஆதவாக 172 உறுப்பினர்கள் வாக்களித்தால் போதுமானது. இச்சூழலில், தீர்மானத்திற்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதன் மூலம், இம்ரான்கான் தலைமையிலான அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஒரு பிரதமர் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story

மேலும் செய்திகள்