"இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவு-நெதர்லாந்து வலுசேர்க்கிறது" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கு வலுசேர்ப்பதில், நெதர்லாந்து முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கு வலுசேர்ப்பதில், நெதர்லாந்து முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக நெதர்லாந்து சென்றுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை கவுரவிக்கும் வகையில், ராயல் அரண்மனையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது அங்கு உரையாற்றிய அவர், அன்பான வரவேற்பும், உபசரிப்பும் அளித்த நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாவை இருநாடுகளும் கூட்டாக கொண்டாடுவது, வரலாற்றில் மைல்கல்லாக இருக்கும் என ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு இந்தியாவும், நெதர்லாந்தும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருவதாகவும், முதலீடு, இணைப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் என இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளுக்கு வலுசேர்ப்பதில், நெதர்லாந்து முக்கிய பங்கு வகிப்பதாகவும், குடியரசு தலைவர் ராம்நாத் பாராட்டு கோவிந்த் தெரிவித்தார்.
Next Story