வரலாற்றில் முதல் முறையாக நிறுத்தப்பட்ட வசந்தகால நிகழ்வு - மக்கள் கடும் எதிர்ப்பு

இலங்கையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வசந்தகால நிகழ்வு பாதியில் நிறுத்தப்பட்டது.
x
இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நுவரெலியாவில், ஆண்டுதோறும் ஏப்ரல் 1 ஆம் தேதி வசந்தகால நிகழ்வு நடப்பது வழக்கம். இந்தாண்டும் வசந்தகால நிகழ்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களில் ஒரு பிரிவினர், விழா நடக்கும் இடத்திற்கு அத்துமீறி நுழைந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வசந்தகால நிகழ்வை ரத்து செய்ய வேண்டும், இலங்கை அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து, வசந்தகால நிகழ்வுகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்