ரஷ்யாவுக்கு நிபந்தனை விதித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யாவுடன் நடுநிலை வகிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
x
ரஷ்யாவுடன் நடுநிலை வகிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து காணொலி காட்சி மூலமாக ரஷ்ய பத்திரிகையாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, ரஷ்யாவுடனான அமைதி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக மத்தியஸ்த நிலையை ஏற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது எனவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தை மூன்றாம் தரப்பினரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா போர் நடவடிக்கைகளை திரும்பபெறாமல் அமைதி உடன்படிக்கையை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே ரஷ்யா, உக்ரைன் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, துருக்கியில் இன்று தொடங்குகிறது.


Next Story

மேலும் செய்திகள்