உக்ரைன் போரில் சூப்பர் சோனிக் ஏவுகணை? || Thanthi Tv

உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் குண்டு மழையை பொழிந்துவருகிறது. கம்பீரமாக காட்சியளிந்த நகரங்கள் எல்லாம் உருக்குலைந்து, கைவிடப்பட்டு பேய் நரகரங்களாக காட்சியளிக்கின்றன. மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள்.
x
உக்ரைன் மீது படையெடுத்திருக்கும் ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களில் குண்டு மழையை பொழிந்துவருகிறது. கம்பீரமாக காட்சியளிந்த நகரங்கள் எல்லாம் உருக்குலைந்து, கைவிடப்பட்டு பேய் நரகரங்களாக காட்சியளிக்கின்றன. மக்கள் உயிரை பிடித்துக்கொண்டு அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். அழகிய உக்ரைன் உருகுலைவதை காண முடியாத செலன்ஸ்கி அரசு, பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுத்துள்ளது. மறுபுறம் இடைவிடாத தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. மரியபோல் நகரம் ரஷ்யாவின் முற்றுகை தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது. உக்ரைனில் மார்ச் 17 ஆம் தேதி வரையில் பொதுமக்களில் 816 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஆயிரத்து 333 பேர் காயம் அடைந்துள்ளார்கள் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இதற்கிடையே உக்ரைனில் 'கின்ஷால்' சூப்பர்சோனிக் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதாகச் சொல்லி, ரஷ்யா அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ரஷ்யா அதிநவீன கின்ஷால் ஏவுகணையை கடந்த 2018 ஆம் ஆண்டு ராணுவத்தில் அறிமுகம் செய்தது. அது ஒலியைவிடவும் 10 மடங்கு வேகமாக செல்லும் திறன் கொண்டது. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எந்த ஒரு இலக்கையும் துல்லியமாக தாக்க வல்லது. 'கின்ஷால்' என்றால் கூர்மையான வாள் என்று பொருள். 480 கிலோ எடைகொண்ட அணு ஆயுதத்தையும் சுமந்து செல்லவல்லது. மணிக்கு அதிகபட்சம் 12 ஆயிரத்து 350 கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது. ரஷ்யாவின் நவீன சூப்பர்சோனிக் ஏவுகணையான கின்ஷால், பொதுவாக வானில் செல்லும் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்த பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு கட்டமைப்பிலிருந்து தப்பிவிடும் எனக் கூறப்படுகிறது. gfx out முதல்முறையாக தாக்குதலில் 'கின்ஷால்' ஏவுகணையை பயன்படுத்தியிருப்பதாக கூறியிருக்கும் ரஷ்யா, மேற்கு உக்ரைனில் இருந்த ஆயுதக் கிடங்கை அழித்திருப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது 'கின்ஷால்' ஏவுகணை வீச்சு? ரஷ்ய ராணுவத்தில் 'கின்ஷால்' ஏவுகணை 2018-ஆம் ஆண்டு அறிமுகம் ஒலியை விடவும் 10 மடங்கு வேகமாகச் செல்லும் வல்லமை 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் தாக்க வல்லது 'கின்ஷால்' என்றால் கூர்மையான வாள் எனப் பொருள் 480 கிலோ எடை கொண்ட அணு ஆயுதத்தையும் சுமந்து செல்ல வல்லது மணிக்கு அதிகபட்சம் 12,350 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது 'கின்ஷால்' வான் பாதுகாப்பு கட்டமைப்பிலிருந்து தப்பும் வல்லமை கொண்டது

Next Story

மேலும் செய்திகள்