“போர் தொடரும்...“ - ரஷ்யா அதிரடி
உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் உடனான போரை நிறுத்த ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா தங்கள் நாட்டில் இனப்படுகொலை செய்து வருவதாகவும், எனவே போரை உடனடியாக நிறுத்த ரஷ்யாவிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் அரசு நாடியது. இது குறித்து விசாரித்த சர்வதேச நீதிமன்றம், உடனடியாக போரை நிறுத்த ரஷ்யாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ள ரஷ்ய அரசு, இந்த தீர்ப்பை கணக்கில் எடுத்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. உக்ரைனில் இருந்து ராணுவ படைகளை திரும்ப பெறுவதற்கு, ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து போர் நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story