"இலங்கை மீனவர்களின் தேவையை அறிந்து இந்திய அரசு உதவி" - இலங்கைக்கான இந்திய துணைத்தூதர்

துன்பம் வரும்போது, உதவுவதே நட்புக்கு அழகு என இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார்.
x
துன்பம் வரும்போது, உதவுவதே நட்புக்கு அழகு என இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நடராஜன் தெரிவித்துள்ளார். 

இலங்கையில், மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு இந்திய அரசு உதவியுடன் உலர் உணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ராகேஷ் நடராஜன், குழந்தையின் தேவையை தாய் எப்படி அறிந்துகொள்கிறாரோ, அப்படித்தான், இந்திய அரசு, இலங்கை மீனவர்களின் தேவையை அறிந்து உதவுவதாக தெரிவித்தார். வடக்கு  மாகாணத்திற்கும், மீனவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார் மாவட்டங்களில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவிலும் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் ராகேஷ் நடராஜன் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்