கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் திருப்பலி நிகழ்வு - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, இந்த வருட திருவிழாவானது இருநாட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், கொடியேற்றத்தை அடுத்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி உள்ளிட்டவை நடைபெற்றன. இந்நிலையில், திருவிழாவின் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில், வடமாகாண கடற்படை தளபதி பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கடற்படை தளபதி அட்மிரல் விஜேகுணரத்ணா, கடற்படை இராணுவ அதிகாரிகள், பக்தர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
Next Story