கீவ் நகரில் தாக்குதல் - இந்திய மாணவர் மீது பாய்ந்த‌ துப்பாக்கி குண்டு

கீவ் நகரில் இருந்து வெளியேற முயன்ற இந்திய மாணவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த‌தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
x
கீவ் நகரில் இருந்து வெளியேற முயன்ற இந்திய மாணவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த‌தால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் அண்டை நாடான போலந்து சென்றுள்ள மத்திய அமைச்சர் வி.கே.சிங், மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போர் நடைபெற்று வரும் உக்ரைன் தலைநகர் கீவ்வில்இருந்து போலாந்து நாட்டை நோக்கி பயணித்த இந்த மாணவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்த‌தாகவும், இதில் காயமடைந்த அந்த மாணவர் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வி.கே.சிங் தெரிவித்தார். மேலும், உக்ரைனில் இருந்து வெளியேறும் மாணவர்களை தங்க வைக்க போலாந்து நாட்டில் போதிய இடம் இல்லை என்பதால் கூடுதல் விமானங்களை இயக்கி மாணவர்களை இந்தியா அழைத்து வர முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்