"இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை" - பிரதமர் மோடியிடம் ரஷ்யா அதிபர் புதின் உறுதி

இந்திய மாணவர்களை உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
x
இந்திய மாணவர்களை உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது  தொடர்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்கள் பேசியது  தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவலை ரஷ்ய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் போர் நடக்கும் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக ரஷ்ய ராணுவத்திற்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மாணவர்களை கார்கிவ்-ல் இருந்து குறுகிய பாதை வழியாக ரஷ்ய எல்லைக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்