"உக்ரைனில் இருந்து 17,000 இந்தியர்கள் வெளியேற்றம்" - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ரஷ்ய அரசு தந்த அறிவுறுத்தல் காரணமாக, 6 மணிக்குள் இந்தியர்களை கார்கிவ்வில் இருந்து வெளியேற சொன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
x
ரஷ்ய அரசு தந்த அறிவுறுத்தல் காரணமாக, 6 மணிக்குள் இந்தியர்களை கார்கிவ்வில் இருந்து வெளியேற சொன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மொத்தம் 15 விமானங்களில் மூன்றாயிரத்து 352 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ச்சி கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 விமானங்கள் தரையிறங்கியதாக அவர் தெரிவித்தார். அடுத்த 24 மணி நேரத்திற்கு, 15 விமானங்கள் மீட்புப்பணிக்கான அனுப்ப தயாராக உள்ளதா கூறியுள்ளார். உக்ரைனில் போர் துவங்கிய நாள் முதல், இந்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து, இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் வெளியேறியதாக அரிந்தம் பக்ச்சி தெரிவித்துள்ளார். ரஷ்ய அரசு, தந்த அறிவுறுத்தல் காரணமாக, 6 மணிக்குள் இந்தியர்களை கார்கிவ்வில் இருந்து வெளியேற சொன்னதாக, அரிந்தம் பக்ச்சி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்