ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் - வாக்களிக்காதது ஏன்? - இந்தியா விளக்கம்

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் மீது, வாக்களிக்காதது ஏன்? என இந்தியா விளக்கம் அளித்துள்ளது
x
ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் மீது, வாக்களிக்காதது ஏன்? என இந்தியா விளக்கம் அளித்துள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, இதற்கான விளக்கத்தை, அளித்தார். அதில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எங்கள் அரசு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாகவும், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதிலுள்ள சிக்கலை கருத்தில் கொண்டே, ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்