"தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுங்கள்..!!" - மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை துணை தலைவர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை உடனடியாக மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை துணை தலைவர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனில் நிலவி வரும் அசாதாரணமான சூழலால் அங்கு சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாக மீட்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தமிழக மாணவர்களை விரைந்து மீட்க கோரி மத்திய அரசுக்கு ஆர்.எஸ் பாரதி எழுதியுள்ள கடிதத்தில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும், அவர்களின் பெற்றோர் முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் அங்குள்ள மாணவர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு ஆகும் செலவை அரசே ஏற்கும் என மாநில அரசு அறிவித்திருப்பதும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story