ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ரூ.4503 கோடி நிதி உதவி.. - அதிரடியாக அறிவித்தது அமெரிக்கா

ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைனுக்கு, 600 மில்லியன் டாலர் நிதி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.
x
ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைனுக்கு, 600 மில்லியன் டாலர் நிதி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு உள்ளார்.

ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்நிலையில், போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு உடனடியாக 600 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரத்து 503 கோடி ரூபாய் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. உக்ரைனின் ஒட்டுமொத்த தேவைக்காக 250 மில்லியன் டாலர்களும், ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளுக்கு 350 மில்லியன் டாலர்களும் அளிக்கப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ ரஷ்யப் படைகள் சூழ்ந்துள்ள நிலையில், நிதி உதவி அளிப்பதாக அமெரிக்கா கூறியிருப்பது, முக்கியத்துவம் பெற்று உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்