"உடனடியாக போரை நிறுத்துங்கள்" - ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு...

உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களின் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் கேட்டறிந்தார்.
x
பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பேசினார். 
அப்போது, ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்ற தனது நீண்டகால நம்பிக்கையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 
வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்கள், குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலைகள் குறித்தும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேறி இந்தியா திரும்புவதற்கு, இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்றும் ரஷ்ய அதிபர் புதினிடம் தெரிவித்தார். அப்போது, உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்